‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்

இனி தவெகவோடுதான் இணைந்து, தொடர்ந்து பயணிப்போம்.
‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதான் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்
Published on

தவெக - விசிக கூட்டணித் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யை, விசிகத் தலைவர் திருமாவளவன் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது;

“தவெகவோடு நாங்கள் இணைந்து 100 நாட்கள் ஆகின்றன. அவர்களோடு இணைந்து தொடர்ந்து பயணிப்போம் என்பதை நேற்று (ஆக.17) மாநாட்டிலேயே நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

ஆளுங்கட்சியோடு பயணத்தோம், இனி ஆளுங்கட்சியாக பரிணமிப்போம் என்கிற முழக்கத்தையும் மாநாட்டில் முன்வைத்தேன். இன்று கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன்மூலம் நாங்களும் ஒரு ஆளுங்கட்சி அடையாளத்தை பெற்றிருக்கிறோம் என்பது ஒரு வளர்ச்சி.

இதனை தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி எங்களது அரசின் நிலைப்பாடு இருக்கும்.” என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com