கூட்டம் குறைந்ததால் மறைமலைநகர், சி.எம்.டி.ஏ. பூங்காவில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்ட பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்

சொந்த ஊர் செல்பவர்கள் மொத்தமாக ஒரு இடத்தில் கூடுவதை தவிர்க்க தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்ப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
Published on: 

மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2026-ம் ஆண்டு ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பொது மக்களின் வசதிக்காக 5 இடங்களில் (கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் கிளாம்பாக்கம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், கோயம்பேடு, மாதவரம் புதிய பஸ் நிலையம், கால நிலைப் பூங்கா தற்காலிகப் பஸ் நிலையம் மற்றும் மறைமலைநகர் தற்காலிகப் பஸ் நிலையம்) அமைந்துள்ள பஸ் நிலையங்களில் இருந்து சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

இடம் மாற்றம்

வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் தற்காலிகப் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட வழித்தட பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வழக்கமாக இயக்கப்படும் நடை மேடைகளில் இருந்தும் இயக்கப்படுகிறது.

காலநிலைப் பூங்கா தற்காலிகப் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை மார்க்கமாக போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள், இன்று கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தின் வழக்கமாக இயக்கப்படும் நடைமேடை எண் 7-லிருந்தும் இயக்கப்படுகிறது.

கும்பகோணம் மார்க்கம்

மறைமலைநகர் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள், இன்று கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தின் வழக்கமாக இயக்கப்படும் நடைமேடை எண் 5-லிருந்தும் இயக்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com