திருமுல்லைவாயலில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்-வாலிபர் பலி

தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
திருமுல்லைவாயலில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்-வாலிபர் பலி
Published on: 
Summary

போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான முகப்பேரைச் சேர்ந்த பாபு என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனஞ்செயன்(வயது28). கார் டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் திருமுல்லைவாயலில் இருந்து ஆரிக்கம்பேடு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு

திருமுல்லைவாயல், எட்டியம்மன் கோவில் அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தனஞ்செயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான முகப்பேரைச் சேர்ந்த பாபு என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com