செஞ்சி அருகே குடும்பத்தகராறில் கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை?

கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கிணற்றில் குழந்தையை தேடிய தீயணைப்புத்துறையினர்.
கிணற்றில் குழந்தையை தேடிய தீயணைப்புத்துறையினர்.
Published on: 
Summary

சிறுவனின் தந்தையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி தேவி.

சிறுவன்

இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும், 6 வயதில் சஞ்சய் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். சஞ்சய் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறுக்கு பிறகு செல்வராஜ் கட்டைப்பை ஒன்றை எடுத்து கொண்டு தெருவில் நடந்து வந்தார்.

பின்னர் நேராக அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்ற அவர், அந்த கட்டைப் பையை கிணற்றில் வீசி விட்டு சென்றார்.

கிணற்றில் வீச்சு

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரிடம், எதை கிணற்றில் வீசி விட்டு வருகிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு அவர், எனக்கும், எனது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், எனது மகனை கிணற்றில் வீசி விட்டு வருவதாக கூறியுள்ளார்.

இதை கேட்டதும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பிணமாக மீட்பு

மேலும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி, சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து சிறுவன் பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் தந்தையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X