போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தபோது தப்பி ஓடிய சிறுவன் சிக்கினான்

தப்பி ஓடிய சிறுவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தபோது தப்பி ஓடிய சிறுவன் சிக்கினான்
Published on: 
Summary

போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் தப்பி ஓடினான். முகப்பேரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சிறுவனை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

மதுரவாயல் பைபாஸ் சாலையில் வாலிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக முகப்பேர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் இருவரையும் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

போலீஸ் நிலைய வளாகத்தில் வந்தவுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிய சிறுவன் திடீரென போலீசாரை தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய சிறுவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இரவு முகப்பேரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சிறுவனை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

பின்னர் அவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்த்தனர்.

X