கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல்.. இறக்கிவிடப்பட்ட 176 பயணிகள் - சென்னை - கோவா விமானத்தில் திக் திக் சம்பவம்

மாலை 6.55 மணிக்குள் அனைத்துப் பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர்.
சென்னை - கோவா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்
Published on: 
Summary

சென்னையிலிருந்து கோவா புறப்பட இருந்த இண்டிகோ விமானம் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மீனபாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.40 மணிக்கு 176 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் 6E588 இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.

வெடிகுண்டு

அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததை விமான பணிப்பெண்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சோதனை

இதையடுத்து விமானமானது விமான நிலையத்தில் பாதுகாப்பான இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு மாலை 6.55 மணிக்குள் அனைத்துப் பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர்.

பாதுகாப்புப் பணியாளர்கள், வெடிகுண்டு தடுப்பு படையினர் சோதனைகளை மேற்கொண்டனர்.

தாமதம்

தேடுதல் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அது போலி மிரட்டல் என உறுதி செய்யப்பட்டது.

பின்னர் சுமார் ஐந்து மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு, இரவு 10.30 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் மீண்டும் கோவாவிற்கு புறப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com