குப்பைக் குழியில் புதைக்கப்பட்ட பிணம் மீட்பு- போலீசார் விசாரணை

குடியிருப்புப் பகுதியில் உடல் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குப்பைக் குழியில் புதைக்கப்பட்ட பிணம் மீட்பு- போலீசார் விசாரணை
Published on: 
Summary

புதைக்கப்பட்டிருந்த உடல் யாருடையது, ஆணா அல்லது பெண்ணா, அந்த உடல் அங்கு எவ்வாறு, யாரால் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் குடியிருப்புப் பகுதியில் உள்ள குப்பைக் குழியில் உடல் புதைக்கப் பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு உள்ளது.

உடல்

தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு ரங்கசாமி செட்டியார் தெருவில், குப்பைக் கிணறு அருகே ராஜா என்பவரது வீட்டின் பின்புறம் குப்பை கொட்டப்படும் குழி உள்ளது. இன்று காலை அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றவர்கள், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, குப்பைக்குள் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து உடனடியாக கடத்தூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். புதைக்கப்பட்டிருந்த உடல் யாருடையது, ஆணா அல்லது பெண்ணா, அந்த உடல் அங்கு எவ்வாறு, யாரால் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com