போடி அருகே துண்டு துண்டாக வெட்டி பெண் கொடூரக்கொலை

வடமாநில தொழிலாளர்கள் ராணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமாக? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ராணி.
கொலை செய்யப்பட்ட ராணி.
Published on: 
Summary

போடி அருகே துண்டு துண்டாக வெட்டி பெண் கொடூரக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி மெட்டு அருகில் உள்ள சாந்தம்பாறையை சேர்ந்த பாலகுரு மனைவி ராணி (வயது 57). தேனியை பூர்வீகமாக கொண்ட இவர்கள் கடந்த 10 வருடத்திற்கு முன்பு கேரளாவுக்கு ஏலத்தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 1 மகள் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

கொடூரக்கொலை

சமீபகாலமாக ராணிக்கு திடீரென பண வரவு அதிகரித்தது. இதனால் ராணிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் பாலகுருவை ராணியே கொலை செய்தார் என்று சாந்தம்பாறை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானார். பின்னர் இந்த வழக்கில் ராணி மீதான குற்றச்சாட்டு கோர்ட்டில் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். இருந்த போதும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

வட்டி

இந்நிலையில் மகள்கள் இருவரும் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் ராணி பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தார்.

சோரியார், சாந்தம்பாறை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏலத்தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் வடமாநில தொழிலாளர்களும் அடங்குவர். இவர்களுக்கு ராணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சோரியார் பகுதியில் ராணி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது தலை, கைகளை தனித்தனியாக வெட்டி வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசி எறிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து உடல் பாகங்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராணி வீட்டிற்கு அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்ததாகவும், அவர்கள் தற்போது தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தனர்.

அவர்களது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வடமாநில தொழிலாளர்கள் ராணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமாக? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X