மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் பெற நாளை முதல் ‘பயோமெட்ரிக்’ கட்டாயம்

இ-கே.ஒய்.சி. செயல்பாட்டை இதுவரை 90 சதவீதம் வாடிக்கையாளர்கள் முடித்துள்ளனர்.
gas cylinder
Published on: 
Summary

சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகளில் மோசடியை தடுக்கவும், மானியங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இ.கே.ஒய்.சி. சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது.

பயோமெட்ரிக்

மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் பெற 'பயோமெட்ரிக்' கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

கியாஸ் சிலிண்டர்

இதன்பின்னர் மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் பெற முடியாது. இந்த செயல்முறையை முடிக்கவில்லை என்றால் சிலிண்டரை முன்பதிவு செய்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகளில் மோசடியை தடுக்கவும், மானியங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இ.கே.ஒய்.சி. சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது.

இதுவரை இந்த செயல்பாட்டை முடிக்காதவர்கள் இன்று மாலைக்குள் முடித்துக் கொள்ள இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

இ-கே.ஒய்.சி. செயல்பாட்டை இதுவரை 90 சதவீதம் வாடிக்கையாளர்கள் முடித்துள்ளனர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் தான் மீண்டும் பாக்கி இருக்கிறது. இது ஒரு அத்தியாவசியம் என்பதால் விடுபட்ட வாடிக்கையாளர்களையும் இதில் பதிவு செய்வதற்காக கால அவகாசம் வழங்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com