என்னை மக்களுக்கு அறிமுகம் செய்த குரு - நடிகை ஊர்வசி

பாக்யராஜை போன்று ஒரு திரைக்கதை ஆசிரியராக இந்தியாவிலேயே வர முடியாது.
Urvashi - Bhagyaraj
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் இன்று திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

பாக்யராஜ் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முந்தானை முடிச்சு படத்தில் நடிகை ஊர்வசியை கதாநாயகியாக கே.பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார். படத்தில் இருவரது கதாபாத்திரங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ஊர்வசி ஏராளமான படங்களில் நடித்தார்.

இந்நிலையில் கே.பாக்யராஜ் மறைவடைந்ததையொட்டி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கே.பாக்யராஜ் மறைவு எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 50 ஆண்டுகள் திரைப்பயண கொண்டாட்டம் இப்போதுதான் முடிந்தது. அந்த நிகழ்ச்சிக்கு மேக்அப் போடும்போது கூட பாக்யராஜ் முகமே நினைவுக்கு வந்தது. இப்படி ஒரு செய்தி வரும் என கனவில் கூட நினைக்கவில்லை. என்னை மக்களுக்கு அறிமுகம் செய்த குரு. அவரைப் போன்று ஒரு திரைக்கதை ஆசிரியராக இந்தியாவிலேயே வர முடியாது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com