உலகின் சிறந்த சாலையோர உணவுகளின் பட்டியல் - பரோட்டா 5ம் இடம் பிடித்து அசத்தல்

உலகின் 50 சிறந்த சாலையோர உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அமிர்தசரஸ் குல்ச்சா 6ம் இடம் பிடித்துள்ளது.
உலகின் சிறந்த சாலையோர உணவுகளின் பட்டியல் - பரோட்டா 5ம் இடம் பிடித்து அசத்தல்
Published on

'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் 50 சிறந்த சாலையோர உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.

உலகின் 50 சிறந்த சாலையோர உணவுகளின் பட்டியலில் தமிழ்நாட்டின் பிரபல உணவான பரோட்டா 5ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அமிர்தசரஸ் குல்ச்சா 6ம் இடமும் சோலே பத்தூரே 40வது இடமும் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக 'டேஸ்ட் அட்லஸ்' வெளியிட்ட உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலில் பரோட்டா 6ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com