

கடைகளில் சோதனை செய்து அங்கு சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட டி.கே.எம் சாலை, கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி, ஒத்தவாடை தெரு, யானைகட்டி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்கள், டீ கடை, மளிகை கடை, பேன்சி ஸ்டோர்ஸ், காய்கறி கடை, பூக்கடை, இறைச்சி கடைகளில் நகராட்சி ஆணையர் அபர்ணா உத்தரவின்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில், நகராட்சி பணியாளர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ஓட்டல்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருந்தது தெரியவந்தது, தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்து அங்கு சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.