

தமிழகத்தில் உட்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச் சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ம் தேதி திருத்தம் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக் கற்களை கொண்டு செல்ல ஜூலை 27-ந்தேதி தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
தற்போது இந்த உத்தரவு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை வரவேற்கும் கட்டுமானத்துறையினர், இதனால் தமிழ்நாட்டில் எம் சேண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் விலை குறையுமென்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்தத் தடையை நீக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதலமைச்சர் சதீஷன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.