கடல் கொந்தளிப்பு, சூறாவளி காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை

பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் விசைப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்த வைக்கப்பட்டன.
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
Published on: 
Summary

மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும்வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 15-ந்தேதி இந்த தாழ்வு மையம் புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. நேற்று கடலுக்கு செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்பட்ட அதே வேளையில் இரவில் கண்டிப்பாக கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படிநேற்று காலை கடலுக்கு சென்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரவில் கரை திரும்பினர்.

ராட்சத அலைகள்

இதனிடையே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் இன்று காலை கடல் வழக்கத்தைவிட கொந்தளிப்புடன் காணப்பட்டது. பாம்பன், தனுஷ்கோடி, அரிச்சல் முனை உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின.

மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும்வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

வர்த்தகம் பாதிப்பு

பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் விசைப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்த வைக்கப்பட்டன. இருப்பினும் சூறாவளியால் சில படகுகள் ஒன்றுடன் மற்றொன்று மோதி சேதமடைந்தன. வழக்கமாக வார இறுதி நாட்களில் மீன் வியாபாரம் சூடு பிடிக்கும் என்பதால் மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு செல்வார்கள். ஆனால் இன்று வானிலை மாற்றம் காரணமாக தடை விதிக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.2 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

X