தமிழக பாடத்திட்டத்தில் முக்கிய பாடங்கள் தவிர்ப்பு- ஆளுநர் குற்றச்சாட்டு

கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துகளை தெரிவித்தார்.விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்படும் மறுக்கப்பட்டும் வருகிறது.
தமிழக பாடத்திட்டத்தில் முக்கிய பாடங்கள் தவிர்ப்பு- ஆளுநர் குற்றச்சாட்டு
Published on

தமிழக பாடத்திட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.

கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்துதலும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் உள்ளது.

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்படும் மறுக்கப்பட்டும் வருகிறது.

கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உள்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com