

போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் மெயின் தெருவில் வங்கி ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையம் கடந்த 3 மாதமாக பூட்டி கிடக்கிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரம் இயங்காமல் இருந்ததால் ஏமாற்றம் அடைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை நொறுக்கி சேதப்படுத்தினர்.
பின்னர் அதே பகுதியில் உள்ள ரகுநாதன் என்பவரது மளிகை கடையை உடைத்து ரூ. 29 ஆயிரம் ரொக்கப்ப ணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
மேலும் அருகில் உள்ள செல்போன் கடையில் இருந்த 3 கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை ஏ.டி.எம்.,மையம் மற்றும் மளிகை கடையை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பிசென்று இருப்பதை அறிந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.