

சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது.
நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.
இந்தநிலையில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது. இன்று முதல் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது.
இன்று தவெக ஆட்சி பொறுப்பேற்று 100வது நாள் ஆகியுள்ள நிலையில் முதல்வர் விஜய் ஆட்சியை சபாநாயகர் பிரபாகர் பாராட்டினார். 100 நாளை தொட்டிருக்கும் முதல்வரின் ஆட்சி நூற்றாண்டுகள் கடந்து பேசப்படும் சாதனைகளை செயவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என அவர் தெரிவித்தார்.
முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசிய பின்னர், துறையின் அமைச்சர் கள் செங்கோட்டையன் (வருவாய் துறை). டாக்டர் அருண்ராஜ் (சுகாதாரத்துறை) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள்.
பின்னர், இந்த துறையின் சார்பில் புதிய அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால் வெளியிடுவார்கள்.