ஆசிய பாராலிம்பிக்ஸ்: பேட்மிண்டனில் வெள்ளி வென்ற சிவராஜன் சோலைமலைக்கு ரூ.50 லட்சம்- முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் பாராட்டுகளுடன், உயரிய ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார்.
Sivarajan cholaimalai- TN CM Vijay
Published on: 

ஆசிய பாரா விளையாட்டு பேட்மிண்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜவன் சோலைமலைக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டுகளுடன், உயரிய ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இச்சாதனையைப் படைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்திடும் வகையில் அவரது வெற்றி அமைந்துள்ளது. வீரர் சிவராஜன் சோலைமலை அவர்கள், மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com