ஆரல்வாய்மொழி அருகே மின் கம்பத்தில் மோதிய அரசு பஸ்

விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.
விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை படத்தில் காணலாம்.
விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை படத்தில் காணலாம்.
Published on: 
Summary

பஸ் முன்பு இருசக்கர வாகனத்தில் யாராவது குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டதா? டிரைவர் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ்கள் ஆரல்வாய் மொழி, தோவாளை வழியாக நாகர்கோவில் வருகின்றன. அதன்படி இன்று காலை விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து அரசு பஸ் வந்தது. காலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஆரல்வாய்மொழி

இந்த பஸ் ஆரல்வாய்மொழி வெள்ளமடம் அருகே உள்ள கிறிஸ்துநகர் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். பஸ் அங்கும் இங்கும் ஓடியதால் அந்த பகுதியில் நின்ற பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். இதற்கிடையில் தறிகெட்டு ஓடிய அரசு பஸ், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

மேலும் சாலையின் ஓரம் கவிழ்ந்து விடும் நிலையில் சென்ற பஸ்சை டிரைவர் ஒரு வழியாக நிறுத்தினார். இதற்கிடையில் பஸ், மின் கம்பத்தில் மோதியதால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. வயர்கள் ஒன்றொடன்று உரசியதால் தீப்பொறி மற்றும் பலத்த சத்தம் எழுந்தது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்த அந்த பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கினர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பஸ் கம்பத்தில் மோதிய வேகத்தில் மின் வயர்கள் அறுந்து விழுந்து மின் தடை ஏற்பட்டதால், மின்சாரம் தாக்குதலில் இருந்து அவர்கள் தப்பித்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடம் வந்து மின்சாரத்தை அந்த பகுதி முழுவதும் துண்டித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பஸ் முன்பு இருசக்கர வாகனத்தில் யாராவது குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டதா? டிரைவர் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X