மின்வாரிய உபகரணங்கள் கொள்முதலில் மோசடி - 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னையில் 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறது.
transformer
Published on

டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலில் மோசடி எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூரில் சுமார் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்வாரியத்திற்கு உபகரணங்கள் வழங்கிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெருங்குடியில் 4 இடங்கள், அண்ணா நகரில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர், செங்கல்பட்டிலும் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com