அந்தியூரில் தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பூக்கடைக்குள் பாய்ந்தது- 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

விபத்து குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூரில் தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பூக்கடைக்குள் பாய்ந்தது- 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
Published on: 
Summary

விபத்தில் பூக்கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பிரவீன், முருகேஷ் மற்றும் சண்முகம் ஆகிறது 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ் நேற்று இரவு 9 மணிக்கு அந்தியூர் புதுக்காடு செல்லும் சாலையில் உள்ள செட்டுக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை அதன் உரிமையாளர் அருண்குமார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அந்தியூர் அரசு மருத்துவமனை வளைவில் பஸ் திரும்பிய போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அப்போது பஸ் சிலர் மீது உரசியபடி சென்றது. பஸ் தாறுமாறாக வருவதை பார்த்து சிலர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் தனியார் பஸ் அங்கிருந்த பூக்கடை, பேக்கரியில் வேகமாக பாய்ந்து அங்குள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் பூக்கடை முற்றிலும் சேதம் அடைந்தது. விபத்து நடந்ததும் பஸ்ஸில் இருந்த உரிமையாளர் அருண்குமார் மற்றும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி சென்றுவிட்டனர்.

விபத்து

இந்த விபத்தில் பூக்கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பிரவீன், முருகேஷ் மற்றும் சண்முகம் ஆகிறது 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

மேலும் பஸ் தாறுமாறாக வருவதை உணர்ந்த சண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து அருகில் இருந்த சாக்கடை தாண்டி கீழே குதித்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதேபோல் விபத்து ஏற்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு தான் பூக்கடை உரிமையாளர் அனிதா (38) அவரது மகள் கிருபா (16) ஆகியோர் சாப்பிடுவதற்காக வெளியே சென்றனர். இதனால் அவர்களும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

போலீசார் வழக்கு பதிவு

தனியார் பஸ் மின் கம்பத்தில் மோதியதால் தேர்வீதி பர்கூர் ரோடு ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முக்கியமான சந்திப்பு என்பதால் விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

விபத்து குறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மட்டும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்தியவர்கள் இங்கு வரவேண்டும் என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விபத்து குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X