மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சத்தியபாமா- மரகதம் குமரவேல்
Published on
Summary

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த இரு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இதனிடையே தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைவருக்கும் வணக்கம்.

வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.

1. 35-மதுராந்தகம் (தனி) - திருமதி K.மரகதம் குமரவேல், Ex.M.LA.. கழகத் துணைப் பொதுச் செயலாளர்

2. 101-தாராபுரம் (தனி) திருமதி.சத்தியபாமா. Ex.MLA.. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com