சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!

போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
Published on: 

திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் மட்டுமின்றி அவரது மகன், மனைவி என 7 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி

கடந்த 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, ​​வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.2.68 கோடி முதல் ரூ.4.90 கோடி வரை சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 20 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, போதிய ஆதராங்கள் இல்லை எனக்கூறி இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் ஆனந்த பத்மநாபன், ஆனந்த ராமகிருஷ்ணன், ஹரிஹரன் மற்றும் அவரது சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன் ஆகிய 7 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X