முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதற்கு காரணமே இதுதான்: இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்- அன்புமணி ராமதாஸ்
முதலமைச்சர் விஜய்- அன்புமணி ராமதாஸ்
Published on

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்திருக்கு. கடந்த 10 நாட்களாக மதுரை, கோவை, சென்னை போன்ற நகரங்களில் கொலைகள் நடந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் போதை மற்றும் மது. இதை இன்னும் கட்டுப்படுத்தனும். ஓரளவிற்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இது போதுமானது கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமை ஆகியிருக்கிறார்கள். அதை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் மோசமான விளைவுகள் வரும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நாங்கள் படிப்படியாக மதுவை குறைப்போம் என்றார்கள். அவர்கள் செய்யும் நடவடிக்கைகளை பார்த்தால் மது வழிகளை அதிகப்படுத்துவற்கான பல முயற்சிகளை நடத்தியிருக்காங்க. வருவாயை இன்னும் எப்படி அதிகப்படுத்தலாம் என்பதற்கான அலுவாலியா தலைமையில் ஐவர் குழு அமைத்திருக்கிறார்கள். டாஸ்மாக்கில் எப்படி வருவாயை உயர்த்தலாம் என்பது போன்ற Terms கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது டாஸ்மாக்கில் செயலி கொடுத்து ஆன்லையில் புக் செய்யலாம். தனியாரிடம் விற்பனை செய்யலாம் என்பது தேவையில்லாதது. இவ்வளவு கொலைகள் நடந்திருப்பது இதனால்தான்.

விஜய் வெற்றி பெற்றதற்கு காரணம்

த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற்றதற்கு காரணம், கடந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது. அன்றாடம் கொலைகள் நடந்து கொண்டிருக்கு. இந்த காரணத்திற்காகத்தான் அனைத்து மக்களும் சேர்ந்து விஜய்க்கு வாக்கு அளித்தார்கள்.

அந்த பிரச்சினையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை அவரின் கீழ்தான் உள்ளது. இதை முதலமைச்சர் பார்க்க வேண்டும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com