

ரூ.100 கோடி கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் லஞ்ச புகார் வழக்கில் வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அன்பில் மகேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.100 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், போலீஸ் கஸ்டடி விசாரணை முடிந்த நிலையில் மருத்துவமனையில் மருத்துவ பிரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சிறப்பு நீதீமன்றத்திற்கு அன்பில் மகேஷ் அழைத்துவரப்பட்டார்.
அப்போது, போலீஸ் காவலில் இருந்தபோது உணவு, உநடை எல்லாம் முறையாக வழங்கினார்களா? என அன்பில் மகேஷிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
விசாரணையின்போது காவல்துறையினர் துன்புறுத்தினார்களா என்றும் அன்பில் மகேஷிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சிறையில் துன்புறுத்தவில்லை, உணவு மற்றும் உடை முறையாக வழங்கினார்கள் என அன்பில் மகேஷ் நீதிபதியிடம் கூறினார்.
அன்பில் மகேஷின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையையும் போலீசார் நீதிபதியிடம் தாக்கல் செய்தனர்.
மேலும் விசாரணை நிறைவடைந்த நிலையில், அன்பில் மகேஷை 6ம் தேதி வரை மீண்டும் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ரூ.100 கோடி லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷை வரும் 6ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அன்பில் மகேஷ் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு மீதான காவல்துறை பதில் மனுவை நாளை காலை வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையின் பதில் மனுவை முன்கூட்டியே வழங்கினால் நாளை வாதிட எளிமையாக இருக்கும் என்ற அன்பில் மகேஷின் தரப்பு கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
சிறைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக 10 நிமிடங்கள் வழங்கறிஞர்களுடன் பேசுவதற்கு அன்பில் மகேஷூக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.