அன்பில் மகேஷுக்கு 4-ந்தேதி வரை போலீஸ் காவல்: சிறப்பு கோர்ட் உத்தரவு

போலீஸ் விசாரணையின்போது, அன்பில் மகேசுடன் அவரது வக்கீல் இருக்கலாம். ஆனால், போலீஸ் நடத்தும் விசாரணையை கேட்க முடியாத தொலைவில் அவர் இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் அழைத்துவரப்பட்ட போது எடுத்தப்படம்
நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் அழைத்துவரப்பட்ட போது எடுத்தப்படம்
Published on: 
Summary

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை லஞ்ச வழக்கில் 4-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியது. விசாரணையின் போது அவரை மன, உடல் ரீதியாக துன்புறுத்தக் கூடாது என்றும், மருந்து உள்ளிட்ட தேவைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த வாரம் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீசார் காவலில் வைத்து விசாரிக்கலாம்

இதையடுத்து, அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, உத்தரவுக்காக தள்ளிவைத்து கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், மனுவை விசாரித்த நீதிபதி, இன்று மதியம் 1 மணி முதல் வருகிற 4-ந்தேதி வரை அன்பில் மகேஷை போலீசார் காவலில் வைத்து விசாரிக்கலாம். அப்போது, அவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது. மருந்து உள்ளிட்டவைகளை வழங்கவேண்டும். போலீஸ் விசாரணையின்போது, அன்பில் மகேசுடன் அவரது வக்கீல் இருக்கலாம். ஆனால், போலீஸ் நடத்தும் விசாரணையை கேட்க முடியாத தொலைவில் அவர் இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

X

/* CUSTOM CODE STARTS FROM HERE */ /* cast code */ /* Trend table with week rankings code */ /* Hero Image section code */