அம்பத்தூர் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அம்பத்தூர் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
Published on: 
Summary

கோவிலின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடி சென்று இருப்பது தெரிந்தது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் மேற்கு பகுதியில் ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோவில் உள்ளது. காலையில் வழக்கம் போல் பூசாரி வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளைபோய் இருந்தன.

பணம் கொள்ளை

மேலும் நள்ளிரவு கோவிலின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

X