திருவள்ளூர்-திருத்தணி இடையே பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு

சாதாரண பஸ்சில், விரைவுபஸ் கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர்-திருத்தணி இடையே பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு
Published on: 
Summary

போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பயணிகளிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட சரியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் வழியாக திருவள்ளூருக்கு அரசு பஸ்(எண்197) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் கடந்த ஒரு மாதமாக கே.கே.சத்திரம்-திருவள்ளூர் இடையே 23 கி.மீ. பயணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட சாதாரண கட்டணமான ரூ.15-க்கு பதிலாக பயணிகளிடம் ரூ.20 வசூலிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சாதாரண பஸ்

சாதாரண பஸ்சில், விரைவுபஸ் கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கூடுதல் டிக்கெட் கட்டணம் தொடர்பாக இந்த டிக்கெட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பயணிகளிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட சரியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எந்தவொரு நடத்துனரும் அதிகக் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X