

வடகிழக்கு பருவமழையில் அதிகமாக ஓடும் நீரினை பண்ணை குட்டைகள் மூலம் சேமித்து நிலத்தின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என அறிவுரை கூறினார்.
பொன்னேரி , மீஞ்சூர் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னேரி அடுத்த ஆலாடு, கே என் கண்டிகை, பி.என்.கண்டிகை, ஏலியம்பேடு, அகரம், கோளூர், ஏறு சிவன், பெரும்பேடு, உள்ளிட்ட பல கிராம வயல்களில் மழை நீர் தேங்கி உள்ளது.
இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் சேதமடைந்து அழுகி உள்ளது. பாதிக்கபப்ட்ட விவசாயிகள் இது தொடர்பாக மீஞ்சூர் வேளாண் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் பாதிக்கபப்ட்ட வயல்களை வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
வயலில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் வடியச் செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழையில் அதிகமாக ஓடும் நீரினை பண்ணை குட்டைகள் மூலம் சேமித்து நிலத்தின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என அறிவுரை கூறினார். மேலும் மழையால் மண்ணில் இருந்து அடித்து செல்லப்படும் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை ஈடுசெய்ய 25 சதவீதம் கூடுதலாக யூரியா மற்றும் பொட்டாசு உரங்களை இடவேண்டும்.
பூச்சி நோய் தாக்குதல் இருந்தால் வேப்ப எண்ணெய் 3 லிட்டர் 200 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கவும் பயிர்களின் ஊட்டச்சத்து குறைகளை போக்க ஏக்கருக்கு யூரியா 22 கிலோ 18 கிலோ வேப்பம் புண்ணாக்கு 4 கிலோ இடுவதன் மூலம் குறைபாட்டை சரி செய்யலாம் என்று தெரிவித்தார்.
இளம் நெற்பயிரினை பாதுகாக்க ஏக்கருக்கு ஒரு கிலோ துத்தநாதர் சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் தெளிந்த நீரினை மழை நின்றவுடன் தெளிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விவசாயிகள் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவித்து ஆலோசனைகள் பெற மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு உதவி இயக்குனர் டில்லி குமார் தெரிவித்தார்