தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!

புதிய சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம்.
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!
Published on: 

தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் முதன்மை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக சிறைத்துறை ஏடிஜிபியாக ஐபிஎஸ் சங்கரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

17 கைதிகள் தப்பியோட்டம்

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், கடந்த திங்கட்கிழமை அன்று இரவு சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்தநிலையில், தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 9 சிறைக்காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இனி கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பினால், அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கலாம் என உத்தரவும் பிறப்பித்திருந்தார்.

அனைவரும் கைது

தப்பிய 17 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் சமீபத்தில் சென்னை புழல் சிறையிலும், அதைத் தொடர்ந்து தற்போது தேனி மாவட்ட சிறையிலும் கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் சிறைத்துறையின் பாதுகாப்பு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன

இந்நிலையில் இந்த பணியிட மாற்றம் வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com