மாமல்லபுரம் பகுதியில் மழை நீரை அகற்ற கூடுதல் வாகனங்கள்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கலங்கரை விளக்கம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது.
மாமல்லபுரம் பகுதியில் மழை நீரை அகற்ற கூடுதல் வாகனங்கள்
Published on: 
Summary

மழைநீரை அகற்ற கூடுதலாக மதுராந்தகம் உள்ளிட்ட வேறு நகராட்சியில் இருந்து கூடுதல் கழிவு நீர் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாமல்லபுரம் நகராட்சியில் மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன் சத்திரம் மற்றும் தேவனேரி ஆகிய பகுதிகளுடன், மொத்தம் 15-வார்டுகள் உள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கிழக்கு ராஜவீதி, டி.கே.எம் சாலை, கலங்கரை விளக்கம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, நின்றது.

நகராட்சி

உடனுக்குடன் மழைநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில், அமைக்கப்பட்ட குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று மழைநீரை அகற்றினர்.

இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகராட்சி கமிஷனர் அபர்ணா, தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், சுகாதார ஆய்வாளர் குரு சாமி, பகுதி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு தொடர்ந்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகளை மேற் ெகாண்டு வருகின்றனர்.

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற கூடுதலாக மதுராந்தகம் உள்ளிட்ட வேறு நகராட்சியில் இருந்து கூடுதல் கழிவு நீர் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொபைல் போன் எண்

இது குறித்து மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா கூறும்போது, தொடர் மழையால் தண்ணீர் தேக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், பொதுமக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும், மாமல்லபுரம் நகராட்சி அலுவலகம் வந்து புகார் அளிக்கலாம் அல்லது நகராட்சியின் ஆன்-லைன் புகார் மையத்திற்கு, 96001 15811 என்ற மொபைல் போன் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். உடனுக் குடன் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com