'கூவத்தூரில் நடிகைகள்': அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு எதிராக கருணாஸ் போலீஸ் புகார்

ஏ.வி.ராஜூவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் இன்று புகார் கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார்.
'கூவத்தூரில் நடிகைகள்': அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு எதிராக கருணாஸ் போலீஸ் புகார்
Published on

கூவத்தூர் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் இன்று புகார் அளித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com