

த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், த.வெ.க அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் அ.தி.மு.க மாவட்ட மகளிரணி சார்பில், பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரியும், த.வெ.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ. பழனிசாமி, சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ராகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், த.வெ.க அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
த.வெ.க. எம்.எல்.ஏ.வின் செயலுக்கு அனைத்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை அந்த எம்.எல்.ஏ. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மாமல்லபுரத்திற்கு அழைத்து பட்டு, வேட்டி சட்டை கொடுத்து அனுப்புகிறார். இதுவே முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருந்திருந்தால் இப்படிப்பட்ட எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுப்பதுடன், சவுக்கடி கொடுத்திருப்பார்கள்.
தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கு நான் தான் வேட்பாளர். எனக்காக ஓட்டுப்போடுங்கள். எந்த தப்பு நடந்தாலும் நான் தான் பொறுப்பு என்று முதலமைச்சர் விஜய் கூறினார். இப்போது இவருக்கு ஓட்டுப்போட்டு தற்போது கலெக்டர் வரைக்கு குறுஞ்செய்தி போயிருக்கிறது. எனவே முதலில் நீங்கள் பொறுப்பெடுத்து ராஜானிமா செய்ய வேண்டும். அதன்பிறகு எம்.எல்.ஏ. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுபாப்பு இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.