

விருதுநகரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகுபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகபட்டி காலனியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 41). இவரது மனைவி பெருமாள் செல்வி. இத்தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். ஐஸ் விற்கும் தொழில் செய்து வந்த அழகுபாண்டி, குலசேகரப்பட்டினம் செல்வதற்காக திருமங்கலம் வந்துள்ளார்.
அப்போது தனது நண்பரை அழைத்துச் செல்வதற்காக திருமங்கலம் மறவன்குளம் பகுதியில் உள்ள மெட்டல் பவுடர் கம்பெனி எதிரே நான்கு வழிச் சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது விருதுநகரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகுபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.