

ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மங்களம் கிராமம், பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ரகுபதி (வயது55). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கொசவன்பேட்டையில் இருந்து வீடு நோக்கி நடந்து வந்தார். பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலையில் சமுதாயக்கூடம் எதிரே சாலை ஓரம் நடந்து வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ரகுபதி மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ரகுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.