

சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பிக்காசோ’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஹக்குனா மட்டாடா’ வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.
தமிழ் ஆதவன் வரிகளுக்கு நடிகர் அபிஷன் ஜீவிந்தே குரல் கொடுத்துள்ளார். இது ஜீவிந்த் பாடும் முதல் பாடலாகும். இதன்மூலம் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராகவும் அறிமுகமாகிறார். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
ஹக்குனா மட்டாடா என்றால் ஆப்பிரிக்க மொழியில் ‘கவலைகள் இல்லை’ என்று பொருளாம்.
கௌதம் சிவராமன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் , சிவானி நாகரம், யோகலட்சுமி மற்றும் கானா வினோத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதை விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அடுத்தாண்டு ஜனவரியில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.