சாமானியர்களின் ஆட்சியை ஏற்படுத்தியவர் முதலமைச்சர் ஜோசப் விஜய்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் வென்றதன் மூலம் சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.
vijay, aadav arjuna
Published on: 
Summary

சாமானியர்களின் ஆட்சியை ஏற்படுத்தியவர் முதலமைச்சர் ஜோசப் விஜய் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் த.வெ.க. அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, முதலமைச்சர் விஜய்க்கு கூட்டணி கட்சியினர் உள்படபல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சாமானியர்களின் ஆட்சியை ஏற்படுத்தியவர் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

இரட்டை இலையும் விசிலும் ஒன்று என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.

சாதி, மதம், பணம் பலம் இல்லாமல் இளைஞர்களும் பெண்களும் வாக்களித்து தவெக ஆட்சியை உருவாக்கினார்கள்.

திமுகவுடன் இணைந்து கூட்டணி உருவாக்க முனைந்து தோல்வி அடைந்தார் இபிஎஸ்.

தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறார் இபிஎஸ்.

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளரை வாபஸ் பெற வைத்து வெற்றி பெற்றவர் பழனிசாமி

தவெக வேட்பாளரை வாபஸ் பெற வைத்து வென்றதால் எடப்பாடி பழனிசாமி எனக்கூறாமல் பழனிசாமி என்றே கூற வேண்டும்.

இடைத்தேர்தலில் தவெக வெற்றியை சாத்தியப்படுத்தியதில் அதிமுக தொண்டர்களுக்கும் பங்கு உண்டு என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com