தமிழகத்தில் உலகத்தரத்தில் ஒலிம்பிக்ஸ் நகரம் உருவாகும்-அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

பெண்கள் விளையாட்டுத்துறைக்கு அதிகமாக வரவேண்டும் என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
Minister Adhav Arjuna
Published on: 

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இவ்விழாவில், முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றுள்ளார்.

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முதலமைச்சர் விஜய் பரிசுகளை வழங்குகிறார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-

ட்ரீம்ஸ் ஒலிம்பிக்ஸ் என்ற குறிக்கோளுடன் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

விளையாட்டுத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தான் முதலமைச்சர் விஜய் அதிகமாக பங்கெடுத்துள்ளார்.

பெண்கள் விளையாட்டுத்துறைக்கு அதிகமாக வரவேண்டும். ஒலிம்பிக்ஸ் வரை செல்லவேண்டும் என்பதே முதலமைச்சர் விஜயின் விருப்பம்.

பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்காகவும், அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகளை உருவாக்குங்கள் என முதலமைச்சர் விஜய் கூறினார்.

முதலமைச்சர் கோப்டைக்காக ரூ.85 கோடி செலவு செய்து உள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகம்.

1994ம் ஆண்டுக்குப் பிறகு மைதானங்கள் கட்டப்படவில்லை. உலகத்தரத்தில் ஒலிம்பிக்ஸ் நகரத்தை உருவாக்க முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

நாம் சாதாரணமாக ஜெயிக்கக்கூடாது. ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கூறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com