உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

நவம்பர் 1-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்
வானிலை நிலவரம்
Published on: 
Summary

அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர் 1-ந்தேதி வடதமிழகம் மற்றும் தெற்கு அந்திர கடல்பகுதியை அடையும். இதனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். நவம்பர் 1-ந்தேதி வடதமிழகம்-தெற்கு அந்திர கடல்பகுதியை அடையும்.

இதனால் நவம்பர் 1-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com