திருத்தணி மலை மீது 8 நாட்கள் ஆட்டோக்களுக்கு தடை

மலைக்கோவில் பகுதியில் உள்ள இட வசதிக்கு ஏற்ப கார்கள், இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும்
திருத்தணி மலை மீது 8 நாட்கள் ஆட்டோக்களுக்கு தடை
Published on: 
Summary

மலைக் கோயில் நுழைவு வாயில் பகுதியில் இருந்து படாசெட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இதர பஸ்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டணமின்றி வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் திருத்தணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதைத்தெடார்ந்து பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, இன்று (2-ந்தேதி), வருகிற 4-ந்தேதி, 11-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி (ஆயுதபூஜை), 20-ந்தேதி (விஜயதசமி), 25-ந்தேதி மற்றும் 27-ந் தேதி ஆகிய 8 நாட்கள் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

மலைக்கோவில்

மேலும், மலைக்கோவில் பகுதியில் உள்ள இட வசதிக்கு ஏற்ப கார்கள், இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் மலைக் கோயில் நுழைவு வாயில் பகுதியில் இருந்து படாசெட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம்.

இதர பஸ்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டணமின்றி வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com