எண்ணூரில் கோவிலில் 7 கோபுர கலசங்கள் திருட்டு

போலீசார் கோபுர கலசங்களை திருடி சென்ற கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எண்ணூரில் கோவிலில் 7 கோபுர கலசங்கள் திருட்டு
Published on: 
Summary

கோவில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன், வாராகி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்களில் இருந்த 7 கலசங்கள் மாயமாகி இருந்தன.

எண்ணூர், அன்னை சிவகாமி நகரில் பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி அம்மன்கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த நிைலையில் கோவில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன், வாராகி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்களில் இருந்த 7 கலசங்கள் மாயமாகி இருந்தன.

பக்தர்கள் அதிர்ச்சி

இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது வயர்கள் துண்டிக்கப்பட்டு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பே கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோபுரங்களில் இருந்த 7 கலசங்களையும் திருடி தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

இரிடியம் மோசடி

இரிடியம் மோசடியில் ஈடுபடும் கும்பல் கோவிலில் இருந்த கோபுர கலசங்களை திருடி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் எண்ணூர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். போலீசார் கோபுர கலசங்களை திருடி சென்ற கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com