நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25 நாட்களில் 7 யானைகள் உயிரிழப்பு

அணை மூலை பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை பார்த்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25 நாட்களில் 7 யானைகள் உயிரிழப்பு
Published on: 
Summary

25 நாட்களில் 7 யானைகள் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரியது. யானைகள் பாதுகாப்பிற்கு வனத்துறையின் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனகோட்டம், முது மலை புலிகள் காப்பகத்தி ற்குட்பட்ட வனப்பகுதி களில் ஏராளமான காட்டு யானைகள், சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வனவில ங்குகள் வசித்து வருகின்றன.

ஆண் யானை உயிரிழப்பு

இந்தநிலையில் மசினகுடி கோட்டம், நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகத்திற்குட்பட்ட தெங்கு மரஹாடா வனப்பகுதியில் நேற்று வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அணை மூலை பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை பார்த்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மசினகுடி துணை இயக்குநர் வித்யாதர் அறிவுறுத்தலின்பேரில் வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்கள், தன்னார்வலர்கள் முன்னிலையில் தெப்பக்காடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் இறந்து கிடந்த யானையை உடற்கூராய்வு மேற்கொண்டார்.

பரிசோதனை

முதற்கட்ட ஆய்வில் 22 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது. இருப்பினும் யானையின் உள்ளுறுப்புகள் சிதைந்துள்ளதால் இறப்பிற்கான காரணம் உறுதி செய்ய முடியவில்லை. இதனால் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 யானைகள் உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்திற்கு உட்பட்ட நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி ஒரு ஆண் யானை குட்டி, சிங்காரா வனச்சரகத்தில் 18-ந்தேதி ஒரு ஆண் யானை, 24-ந்தேதி மசினகுடி வனச்சரகத்தில் வயது மூப்பு காரணமாக ஆண் யானை, நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகத்தில் 27-ந்தேதி மழை வெள்ளத்தில் சிக்கி 55 வயது மதிக்கத்தக்க பெண் யானை, கடந்த 3-ந்தேதி சிங்காரா வனச்சர

கத்தில் பெண் யானை, 4-ந்தேதி 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என கடந்த 25 நாட்களில் மட்டும் 4 ஆண் மற்றும் 3 பெண் யானைகள் என 7 யானைகள் உயிரிழந்துள்ளன.

சோகம்

20 நாட்களில் மசினகுடி கோட்டத்தில் 7 யானைகள் உயிரிழந்துள்ளது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், “குட்டி பிரசவிப்பதில் ஏற்பட்ட சிக்கல், வயது மூப்பு, வெள்ளத்தில் சிக்குதல் என ஒவ்வொரு யானையின் உயிரிழப்புக்கு வெவ்வேறு இயற்கையான காரணங்கள் சொல்லப்பட்டாலும், 25 நாட்களில் 7 யானைகள் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரியது. யானைகள் பாதுகாப்பிற்கு வனத்துறையின் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றனர்.

X