திருவள்ளூர் மாவட்டத்தில் 61 ஊழியர்கள் சஸ்பெண்டு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வாய் மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சஸ்பெண்டு
Published on: 
Summary

திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக 61 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காலி பாட்டில்கள் வாங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடைகளை திறக்காமல் போராடியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை வாங்க வேண்டும் என நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடந்த 2 தினங்களாக பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் நீட்டிப்பு

இது தொடர்பாக திருமழிசை பகுதியில் உள்ள திருவள்ளூர் கிழக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை, தோல்வியடைந்ததையடுத்து ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல், மாதவரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்காமலும், பணிக்கு வராமலும் இருந்த 61 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வாய் மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X