வேதாரண்யத்தில் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி

தொடா்ந்து மழை பொய்த்துப்போன நிலையில், முன்பு எப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
உப்பு உற்பத்தி
உப்பு உற்பத்தி
Published on: 
Summary

கடந்த மூன்று மாதம் காலமாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்றது. இதனால் 6 லட்சம் டன் இலக்கை தாண்டி உப்பு உற்பத்தி நடந்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யபடுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து வேதாரண்யம் பகுதியில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடதக்கது.

வெயிலின் தாக்கம்

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு நாள்தோறும் லாரிகள் மூலம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி முதல் கட்ட பணிகள் தொடங்கி தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறும்.

மழை

ஆனால் தொடா்ந்து மழை பொய்த்துப்போன நிலையில், முன்பு எப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உப்பு உற்பத்தியும் தொடா்ந்து நடைபெற்று, உற்பத்தி அதிகரித்துள்ளது.

6 லட்சம் டன்

இந்நிலையில் கடந்த மூன்று மாதம் காலமாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்றது. இதனால் 6 லட்சம் டன் இலக்கை தாண்டி உப்பு உற்பத்தி நடந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமாக உற்பத்தி நடைபெறுவதால் உரியவிலை கிடைக்கமால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com