

மதுரை காளவாசலில் உள்ள பிரபல நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு நேற்றிரவு முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 500 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.