தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர்

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர்
Published on

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கினார் நடிகர் விஜய். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்படுகின்றனர் என அறிவித்த விஜய் முதல் உறுப்பினராக கட்சியில் சேர்ந்தார்.

இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 8-ம் தேதி சிறப்பு செயலி மூலம் தொடங்கியது. தொடங்கிய 3 நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com