சென்னையில் 'திடீர்' அதிரடி நடவடிக்கை- ஒரே நாளில் 403 குற்றவாளிகள் கைது

சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி வேட்டையை தொடங்கினார்.சென்னையில் 4 மண்டலங்களிலும் 2500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவானதை தொடர்ந்து அதிரடி வேட்டையை போலீசார் நடத்தினார்கள்.
சென்னையில் 'திடீர்' அதிரடி நடவடிக்கை- ஒரே நாளில் 403 குற்றவாளிகள் கைது
Published on

சென்னை:

சென்னையில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதேபோல் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு எதிராகவும் போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி வேட்டையை தொடங்கினார்.

சென்னையில் நேற்று முன்தினம் குற்றவாளிகளை பிடிக்கும் சிறப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். சென்னையில் 4 மண்டலங்களிலும் 2500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவானதை தொடர்ந்து இந்த அதிரடி வேட்டையை போலீசார் நடத்தினார்கள். அப்போது வீடு புகுந்து திருடுதல், செல்போன், செயின் பறிப்புகளில் ஈடுபட்ட 563 குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர்.

சென்னையில் கிழக்கு மண்டலத்தில் 167 குற்றவாளிகளும், வடக்கு மண்டலத்தில் 148 குற்றவாளிகளும், தெற்கு மண்டலத்தில் 141 குற்றவாளிகளும், மேற்கு மண்டலத்தில் 107 குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்தனர்.

இதன் அடிப்படையில் போலீசார் 403 குற்றவாளிகளை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்கள் வீடுகளில் பூட்டை உடைத்து திருடுதல் மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆவர். இவர்களில் 10 பேர் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாக இருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் 29 பேர் திருந்தி புதிய வாழ்க்கையை தொடங்கும் வகையில் அவர்களிடம் பாதுகாப்பு பத்திரம் பெற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 160 குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com