சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
File Pic: Rainfall
Published on: 

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரசு புயல் இன்று இரவு சென்னை கடற்கரையை நெருங்கி, பின்னர் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மழை எச்சரிக்கை:

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X