

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய 3-வது குறுகிய கால டெண்டரை வெளியிட்டுள்ளது.
மாதந்தோறும் 1,000 மெகாவாட் வீதம், 7 மாதங்களுக்கு மொத்தம் 7,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நவ.1ம் தேதி முதல் மே.31ம் தேதி வரை கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்து வரும்நிலையில், மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.