தீபாவளி முன்னிட்டு முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரெயில்கள்

சென்னையில் இருந்து மூன்று சிறப்பு ரெயில்களும் இன்று இரவு இயக்கப்படுகிறது.எழும்பூர், தாம்பரம், சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரெயில்கள் இன்று இயக்கப்படுகின்றன.
தீபாவளி முன்னிட்டு முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரெயில்கள்
Published on

தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா மூன்று சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மூன்று சிறப்பு ரெயில்களும் இன்று இரவு இயக்கப்படுகிறது.

எழும்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சை, வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com